காலா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ???? இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடித்து ரிலீஸுக்கு ரெடியாக உள்ள படம் காலா. தனுஷ் தயாரிக்க பின்னர், லைகா நிறுவனத்திற்கு கைமாறியது. கடந்த மார்ச் 1ம் தேதி இப்படத்தின் டீசர் லீக்காகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சொன்ன நேரத்திற்கு முன்பாகவே டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் தனுஷ். சமூக கருத்துகள் அடங்கிய டீசரும் ஹிட்டாக படகுழுவினர் ஏக மகிழ்ச்சி. இந்நிலையில், தியேட்டர்களில் படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி கடந்த 1-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து போராட்டம் நடத்தி வருகிறது.
இதனால் சினிமா படப்பிடிப்புகளும், டப்பிங் எடிட்டிங் உள்ளிட்ட பணிகளும் அடியோடு முடங்கி உள்ளன. புதிய படங்கள் வெளியாகாததால், பழைய திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. மேலும் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே கேளிக்கை வரி உயர்வை கண்டித்து தியேட்டர் அதிபர்களும் கடந்த 16-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள
இந்த பிரச்சனையால் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா பாடம் அறிவித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலா படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடையில்லா சான்று கொடுக்காததால் தணிக்கை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே காலா திரைப்படத்தின் வெளியிட்டு தேதி குறித்து லைகா நிறுவனம் பதிவு செய்த புதிய ட்வீட் ஒன்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, காலா படத்தின் தாயாரிப்பு நிறுவனமான நாங்கள் இன்னும் ரிலீஸ் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, ஏப்ரல் 27-ல் தேதி ரிலீஸ் போன்ற செய்திகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என மிகச் சாதாரனமாக ட்வீட்டியுள்ளது. இது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.