தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் சரித்திர படம் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’. இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இது சிரஞ்சீவியின் கேரியரில் 151-வது படமாம். மெகா ஸ்டாருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்கு
இசையமைக்க அமித் திரிவேதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. சமீபத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டனர். தற்போது, சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன் மூவரும் இருப்பதுபோல் ஒரு ஸ்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டில் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் இப்படம் தயாராகுகிறது. வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.