"காலா" வுடன் போட்டிபோடும் படம் ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள "காலா" திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரப்பரப்பாக நடந்துவருகின்றன. ஏப்ரல் 27- ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. அதே தேதியில் உலகமெங்கும் ரசிகர்களைக் கொண்டுள்ள மார்வல் ஸ்டுடியோஸின் "அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்" ஹாலிவுட் திரைப்படம்
கிட்டத்தட்ட சூப்பர்மேன், பேட்மேனைத் தவிர நாம் பார்த்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் இப்படத்தில் இருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படமும் தெலுங்கு, இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள "காலா" வும் உலகளாவிய அளவில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இருந்தாலும், நம்ம வேங்கைமவன் "காலா" ஒத்தையா நிப்பாரு!.